ஓசூர்-சானமாவு வனப்பகுதியில் பல பிரிவுகளாக பிரிந்து யானைக்கூட்டம் முகாம்

ஓசூர், மே 24: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தன. 3 குட்டிகளுடன் சுற்றி திரிந்த 14 காட்டு யானைகளை, நேற்று முன்தினம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில், சானமாவு, பேரண்டப்பள்ளி, போடூர் உள்ளிட்ட பகுதிகளில் 6 யானைகள் பிரிவுகளாக பிரிந்துள்ளன. இதில் ஒற்றை யானை ஒன்று அம்பலட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியது. விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் வந்து பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் ஒற்றை யானையை போடூர்பள்ளத்திற்கு விரட்டியடித்தனர். இதனிடையே, ஓசூர்-சானமாவு வனப்பகுதியில் 6 யானைகள் முகாமிட்டு, ராமாபுரம், ஆழியாளம், கோபசந்திரம், நாயனகொண்டஅக்ரஹாரம், ராஜாப்புரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானைகள், இரவில் கிராமத்திற்கு வருவதும், பகல்நேரத்தில் வனத்திற்குள் சென்று விடுவதும் வாடிக்கையாகஉள்ளது. யா னை கள்பயிர்களை சேதப் படுத்தி வருவ தால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பல பிரிவுகளாக பிரிந்திருக்கும் இந்த யானைகளை ஒன்றிணைத்து, அடர்ந்த தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: