குந்தாபாலம் வனத்தில் காட்டு தீ

மஞ்சூர், மே 23:  மஞ்சூர் அருகே ஏற்பட்ட காட்டு தீயில் சுமார் 20 ஏக்கர் புல்வெளிகள் தீயில் எரிந்து சாம்பலானது. மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. காடுகளில் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து சருகாக காட்சியளிக்கிறது. குடிநீர் குட்டைகளும் வறண்டு போயுள்ளது. இதனால் மஞ்சூர் சுற்றுபுறங்களில் உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டு தீ ஏற்பட்டு வனப்பகுதிகள் தீக்கிரையாகி வருவது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மஞ்சூர் அருகே உள்ள குந்தாபாலம் வனப்பகுதியில் திடிர் காட்டு தீ ஏற்பட்டது. ஏற்கனவே செடி, கொடிகள் காய்ந்து கிடந்ததால் மள,மளவென தீ பரவியது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குந்தா ரேஞ்சர் சரவணன் தலைமையில் வனவர் ரவிகுமார் உள்பட 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று தீயை அனைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நீண்ட போராட்டத்திற்குபின் காட்டு தீயை முற்றிலுமாக அனைத்தனர். இந்த தீயால் வருவாய் மற்றும் தனியாருக்கு சொந்தமான சுமார் 20 ஏக்கர் புல்வெளிகள்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: