குடியிருப்பு பகுதியில் குடிமகன்கள் அட்டகாசம்

ஈரோடு, மே 23: ஈரோட்டில் குடியிருப்பு பகுதிகளில் குடிமகன்கள் மது அருந்திவிட்டு போதையில் அந்த வழியாக ெசல்பவர்களிடம் தகராறு செய்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  ஈரோடு நசியனூர் ரோடு சம்பத்நகர் சிந்தாமணி பெட்ரோல் பங்க் பின்புற பகுதியில் சுமார் 75க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த ரோட்டின் எதிர்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கும் குடிமகன்கள் சம்பத்நகரில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.

குடிபோதையில் அந்த வழியாக பெண்கள், குழந்தைகளிடம் தகராறு செய்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்பத்நகர் வீட்டு உரிமையாளர்கள் நலம் நாடும் சங்க செயலாளர் பரமேஸ்வரன் கூறுகையில்,`நசியனூர் ரோடு சிந்தாமணி பெட்ரோல் பங்க பின்புறம் சம்பத்நகர் குடியிருப்பு உள்ளது. இதற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு இந்த ரோட்டில் உள்ள சிமென்ட் திட்டில் அமர்ந்து குடித்துவிட்டு போதையில் தகராறு செய்கின்றனர். இதுதொடர்பாக, கலெக்டரிடமும், எஸ்பி.,யிடமும் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. குடிமகன்கள் குடித்துவிட்டு தகராறு செய்வதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: