பரம்புபட்டி நான்குவழிச்சாலை அபாய வளைவில் விபத்து அபாயம் சாலையை சீரமைக்க கோரிக்கை

திருமங்கலம், மே 23: திருமங்கலம்-உத்தங்குடி நான்குவழிச்சாலையில் பரம்புபட்டி அபாய வளைவில், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை நேராக சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். திருமங்கலத்திலிருந்து மாட்டுத்தாவணியை இணைக்க கப்பலூர்-உத்தங்குடி இடையே ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு தற்போது நான்குவழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதில், கப்பலூர்-மண்டேலா நகர் இடையே பரம்புபட்டி அபாய வளைவில், மின்னல் வேகத்தில் வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும்போது விபத்தில் சிக்குகின்றன. இதே போல் துாத்துக்குடி ரிங்ரோடு, கப்பலூர் ரிங்ரோடு பிரிவு சந்திப்பிலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை போலீசார் தமிழ்நாடு சாலைகள் கட்டமைப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதினர். அதில் பரம்புபட்டி அபாய வளைவில் வாகனங்கள் அடிக்கடி கவிழ்ந்து விபத்தில் சிக்குகின்றன. நான்குவழிச்சாலையாக மாற்றியபோது, பரம்புபட்டி வளைவை அகலப்படுத்தி நேர் பாதையாக மாற்றியிருக்க வேண்டும். மேலும் துாத்துக்குடி நான்குவழிச்சாலை, கப்பலூர் ரிங்ரோடு சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைந்திருக்க வேண்டும். இதனால், தூத்துக்குடி ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் திருமங்கலத்திலிருந்து செல்லும் வாகனத்துடன் மோதி விபத்துகளில் சிக்குகின்றன. எனவே, இந்த இரண்டு இடங்களிலும் விபத்துகளை தவிர்க்க சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: