வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால் விவிபேட் வாக்குகள் மூலம் இறுதி முடிவு

மதுரை, மே 23: வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருந்தால், விவிபேட் இயந்திரத்தில் உள்ள வாக்குகள் மூலம் இறுதி முடிவு எடுக்கப்படும் என கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மக்களவை ெதாகுதி வாக்கு எண்ணிக்கை குறித்து கலெக்டர் நாகராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 6 தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் 4 டேபிள்களில் வைத்து அவை எண்ணப்படும்.

தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கான சர்வீஸ் ஓட்டுகள் எண்ணப்படும். அந்த ஓட்டுகள் ஆன்லைன் மூலமாக ராணுவ வீரர்களின் முகாம்களுக்கு அனுப்பப்பட்டன. முகாம் அதிகாரிகள், அந்த ஓட்டுகளை பதிவிறக்கம் செய்து, அதற்கான பார் கோடுகளை ராணுவ வீரர்களிடம் கொடுத்துள்ளனர். அந்த பார் கோடுகளை ஒட்டி, தபால் மூலம் தங்களது ஓட்டுகளை ராணுவ வீரர்கள் அனுப்பியுள்ளனர். அந்த ஓட்டுகளை ஸ்கேன் செய்து, 2 டேபிள்களில் வைத்து எண்ண உள்ளோம்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு மைக்ரோ அப்சர்வர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படும். மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன், அதன் முடிவு உடனடியாக வெளியிடப்படும்.  வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வருவதற்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவக் கல்லூரி மெயின் கேட் வழியாக உள்ளே வர வேண்டும். ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 30 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.

இதற்கும் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் வித்தியாசம் இருந்தால், விவிபேட் இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கையே இறுதியாக எடுத்து கொள்ளப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குகளை எண்ணுவதற்கு 2 ெஜராக்ஸ் மெஷின்கள், 4 கம்ப்பூட்டர்கள், 15 சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: