10 மணிக்கு முன்னணி நிலவரம் மாநகராட்சி அலட்சியத்தால் துர்நாற்றம் வீசும் நம்ம டாய்லெட்கள்

மதுரை, மே 23: மாநகராட்சியின் அலட்சியத்தால் நம்மடாய்லெட்டுகள் துர்நாற்றம் வீசி வருகின்றன.   திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க, மத்திய அரசின் உத்தரவின்பேரில் மாநகராட்சி பகுதிகளில் நம்ம டாய்லெட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில், மதுரை மாநகராட்சியில் பழங்காநத்தம், மகாத்மா காந்தி நகர், மதிச்சியம், தபால்தந்தி நகர் உள்பட 10 இடங்களில் தலா ரூ.11 லட்சம் மதிப்பில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட்டது. இடத்தின் அளவை பொருத்து 5 முதல் 10 வரையிலான கழிவறைகள் அமைக்கப்பட்டன. இந்த டாய்லெட்டில் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்த வசதி உள்ளது. இதற்கு தேவையான தண்ணீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், மாநகராட்சி நிர்வாகம் நம்ம டாய்லெட்டுகளை முறையாக பராமரிக்கவில்லை. இதற்காக ஒப்பந்தம் விட்டும் பயனில்லை. இதனால், நம்ம டாய்லெட் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. பல டாய்லெட்டுகளில் கதவுகளில் தாழ்ப்பாள் இல்லாததால் பெண்களால் பயன்படுத்த முடியவில்லை. திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத மதுரையை உருவாக்கத்தான், நம்ம டாய்லெட் திட்டமே கொண்டு வரப்பட்டது. ஆனால், சரியாக பராமரிக்காமல்  திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. பலரும் டாய்லெட்டை சுற்றி சிறுநீர் கழிப்பதால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நம்ம டாய்லெட்களை முறையாக பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: