திருச்சி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் மாநகர கமிஷனர் தகவல்

திருச்சி, மே 23: திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் இன்று காலை எண்ணப்படுகிறது. இங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர போலீஸ் கமி ஷனர் அமல்ராஜ் கூறுகையில், சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு பணிக்கு ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகின்றனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். கும்பல் கூட கூடாது. அனுமதி இல்லாத இடத்தில் யாரும் நிற்க கூடாது. வாக்கு எண்ணும் மையம் முன்பு பட்டாசுகள் வெடிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

 இதுதவிர மற்ற பகுதிகளிலும் எந்த பிரச்னையும் இல்லாமலும், மக்களுக்கு எந்தவித தொந்தரவு இல்லாமலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாளையொட்டி அப்பகுதியில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  இதற்கிடையில் நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அங்கு எந்தந்த இடத்தில், எண்ண பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது போன்ற ஒத்திகை பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: