டிஆர்இயூ தொழிற்சங்கம் வலியுறுத்தல் வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் பாதுகாப்பு திருவாரூர் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு அஞ்சலி

திருவாரூர்,  மே 23:  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் படங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் முத்தரசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடியில் கடந்தாண்டு மே மாதம் 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். 13 பேர் இறந்த முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 13 பேர்களின் உருவப் படங்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதன்படி திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் முன்னிலையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் 13 பேர்களின் படங்களுக்கும் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதில்  மாநில நிர்வாக குழு உறுப்பினரும், நாகை எம்பி தொகுதி வேட்பாளருமான செல்வராசு, மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் மற்றும் மாநில குழு உறுப்பினர் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, இளைஞர் மன்ற தேசிய குழு உறுப்பினர் முருகேசு, மாணவர் மன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன் மாநில குழு உறுப்பினர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திருத்துறைப்பூண்டி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதன் முதலமாண்டு நினைவுத்தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ஒன்றிய அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கர், அனைந்திந்திய இளைஞர் பெருமன்றம் ஒன்றிய தலைவர் கணேஷ், ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: