தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சை, மே 23: தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டு கடந்த நிலையில் கொல்லப்பட்ட 13 அறப்போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் நடந்தது. தஞ்சை மாவட்டக்குழு சார்பில் கணபதி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில்  தியாகிகள் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயலாளர் நீலமேகம்  தலைமை வகித்து அஞ்சலி உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாலதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், அரவிந்தசாமி, மாநகர செயலாளர் குருசாமி, அரசு ஊழியர் சங்கம் கோதண்டபாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

இதேபோல் தஞ்சை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி  சூட்டில் பலியானவர்ககளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரகுமார் தலைமை வகித்தார். தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அயானவரம் முருகேசன், தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, தலைமைக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மக்கள் அதிகாரம் மாவட்ட நிர்வாகிகள் தேவா, காந்தி, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், தலைவர் சேவையா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் முத்துகுமரன், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளன மாநில துணை பொது செயலாளர் துரை மதிவாணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.கும்பகோணம்: கும்பகோணம் சிஐடியூ அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சிபிஎம் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னைபாண்டியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: