கும்பகோணம் மணிக்கூண்டில் இயங்காத கடிகாரம் விரைந்து சீரமைக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

கும்பகோணம், மே 23: கும்பகோணம் மகாமக குளக்கரையில் நகராட்சி பராமரிப்பில் உள்ள மணிக்கூண்டில் கடிகாரம் செயல்படாததால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. இதனால் ஆன்மிக சுற்றுலா தலமாக கும்பகோணம் திகழ்கிறது. இதில் பிரதானமாக 12 சிவன் கோயில்கள், 108 வைணவத்தில் உள்ள பெருமாள் கோயில்கள், வீரசைவ மடம், காஞ்சி சங்கர மடம், 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாசி மகாமகம் மற்றும் ஆண்டுதோறும் வரும் மாசிமகம் என கோயில்களில் விழாக்கள் நடைபெறும். இதனால் தினம்தோறும் ஆயிரக்கணக்கானோரும், விழா காலங்களில் லட்சக்கணக்கானோரும் வந்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் கும்பகோணத்துக்கு வந்து சிவன், பெருமாள் கோயில்களை தரிசனம் செய்வதற்கு முன்பு மகாமக குளம், பொற்றாமரை குளம் மற்றும் காவிரி ஆற்றில் புனித நீராடி விட்டு செல்வர். இதை கருத்தில் கொண்டு கோயில்களின் நடைகள் திறப்பது,  மூடுவது நேரத்தை காட்டுவதற்கும், ரயில்கள், பேருந்துகளில் செல்வதற்கான நேரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காசிமடத்தின் உபயத்தில் கும்பகோணம் நகராட்சி பராமரிப்பில் 100 ஆண்டுகளுக்கு முன்பு மணிக்கூண்டு கட்டப்பட்டது. கடந்த மாதம்  பல லட்சம் ரூபாய் செலவில் வண்ணமயமான மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டது. இதனால் கும்பகோணத்துக்கு வரும் பக்தர்கள் மணிக்கூண்டை ரசித்து வந்தனர். இந்நிலையில் மணிக்கூண்டில் உள்ள கடிகாரத்தை நகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் மணிக்கூண்டு கடிகாரம் இயங்கவில்லை.

கும்பகோணத்தில் கோயில்கள், மடங்கள், குளங்கள் பெயர் பெற்றதுபோல் 100 ஆண்டுகள் பழமையான மணிக்கூண்டு பெயர் பெற்றவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த மணிக்கூண்டில் செயல்படாமல் உள்ள கடிகாரத்தை நகராட்சி நிர்வாகம் உடனடியாக இயங்க வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நகராட்சி ஆணையர் (பொ) ஜெகதீசன் கூறுகையில், கும்பகோணம் மகாமக குளத்தின் அருகில் உள்ள மணிக்கூண்டு இயங்காதது குறித்து தகவல் வந்துள்ளது. உடனடியாக சரி செய்யப்

படும் என்றார்.

Related Stories: