இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்

நாமக்கல்,  மே 23: வியாழன், வெள்ளிக்கிழமை நாடாளுன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணியும்,  தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால், இ-சேவை மையங்களில்  விண்ணப்பத்தவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய,  மாநில அரசுகளின் சேவைகளை பெற, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம்,  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வழியாக அரசு இசேவை மையத்தை செயல்படுத்தி  வருகிறது. இந்த சேவை மையத்தில் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதி  சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், வண்ண வாக்காளர் அட்டை அச்சிடுதல்  உட்பட80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. தற்போது பத்து  மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, உயர்நிலைப்பள்ளிகள்  மற்றும் உயர்கல்வியில் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கு தேவையான  சான்றிதழ்களை பெறுவதாக மாணவ, மாணவிகள் அதிகளவில் விண்ணப்பித்து  வருகின்றனர். தேர்தல் அறிவித்தது முதலே இ-சேவை மையங்களி–்ல சான்றிழ்  பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தற்போது தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை வருவதால் சான்று கேட்டு விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து  பொதுமக்கள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில்  கலெக்டர் அலுவலகம்,  தாலுகா அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற  தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று (23ம்தேதி) நடக்கிறது. இதற்கான  முன்னேற்பாடு பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டு  வருகின்றனர்.

நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.  தொடர்ந்து 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமை ஆகிய விடுமுறை நாட்கள்  வருகிறது. இதனால் இ- சேவை மையங்களில் சான்றிதழ் வழங்கும் பணி முற்றிலுமாக  முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, மாவட்டம் நிர்வாகம்  நடவடிக்கை எடுத்து, சான்றிதழ்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: