சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

செந்துறை, மே 23: செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன், மாரியம்மன்  கோயில் தேர் திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் செல்லியம்மன், மாரியம்மன் கோயில் தேர் திருவிழா ஒவ ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்தாண்டுகடந்த 13ந்தேதி(சித்திரை 30) இரவு ஐயனார் காப்பு கட்டுதலுடன் துவங்கி, 14 ந்தேதி செல்லியம்மன், மாரியம்மன் விநாயகருக்கு காப்பு கட்டி திருவிழா துவங்கியது. அன்று முதல் காலை மாலை இரு வேளையும் செல்லியம்மன்சிங்கவாகனத்திலையும், மாரியம்மன் மயில் வாகனத்திலையும், விநாயகர் மூஞ்சூறுவாகனத்துலும்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அப்போது பக்தர்கள் தேங்காய், பூ, பழம், மாவிளக்கு மற்றும் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களை வைத்து படையலிட்டனர். இதனால் விளைச்சல் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் சிறக்கும் என்பது பண்டையகால நம்பிக்கை. மேலும் நேற்றுமுன்தினம் மாதிரி தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய தேர்திவிழாவான நேற்று  காலை விநாயகர், செல்லியம்மன், மாரியம்மன் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தேரில்  எழுந்தருளினர்.மேலும் பொதுமக்கள் தேரில் தங்கள் நிலத்தில் விளைந்த முந்திரி, மா, பலா உள்ளிட்ட விளைப்போருட்களை கட்டி தேரை அலங்கரித்தனர் காலை 9.30மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டு விநாயகர் முன்னே செல்ல பெரிய தேரில் செல்லியம்மன், மாரியம்மன் அருள்பாலித்தவாரு முக்கிய விதிகள் வழியாக செண்டை மேளங்கள் முழங்க வாணவேடிக்கையோடு இரவு 7.30மணிக்கு அதன் சன்னதியை வந்தடைந்தது, உடனே பெண்கள் நடைகும்மிடும், ஆண்கள் அங்கப்பிரதட்சனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.நாளை மறுநாள் மஞ்சள் விளையாட்டுடன் விழா நிறைவு பெறும்.

Related Stories: