மது போதையில் இருந்த முதியவர் சாவு

அரியலூர், மே 23: பெரம்பலூர்,அரியலூர் கிரைம்உடையார்பாளையம் அருகே சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்அன்பழகன் மகன் சின்னதுரை(55). இவர் நேற்று முன்தினம் வி.கைகாட்டி பெரியநாகலூர் பாதையில் உள்ள டாஸ்மாக் கடையில்மதுவாங்கி குடித்து விட்டு அந்த கடை அருகேயுள்ள மரத்தின் கீழ்படுத்துள்ளார். இந்நிலையில் நேற்று 22ம்தேதி அவ்வழியே சென்றவர்கள் ஒருவர் இறந்து கிடப்பதாக கயர்லாபாத் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு சென்ற  எஸ்ஐ கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சின்னதுரையின் உடலை பிரேத பரிசோதனைக்காகஅரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வாலிபர்பலி: அரியலூர் அருகே மேலப்பழூர் கிராமத்தை சேர்ந்தவர்ராஜேந்திரன் மகன் பிரித்திவ்ராஜ்(25). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் மகன் துரைமுருகன்(21) இவர்கள்நேற்று இருவரும் மேலப்பழூரில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது புதுப்பாளையம் அருகேமருதையாற்று பாலத்தில் பிரித்திவ்ராஜ் ஓட்டிவந்த பைக் முன்னேசென்ற வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரித்திவ்ராஜ் இறந்தார். படுகாயமடைந்த துரைமுருகன் அரியலூர்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அரியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறு அண்ணன், தம்பி மீது வழக்கு பதிவு: விக்கிரமங்கலம் அருகே  செட்டித்திருக்கோணம் தெற்கு தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி(44). அதே பகுதியை சேர்ந்தவர் இவரது தம்பி செல்வக்குமார்(36). விவசாயிகளான இருவரும் சொத்து தகராறு சம்மந்தமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21ம்தேதி அன்று பழனிச்சாமியின் வீட்டிற்கு வந்த தம்பி செல்வக்குமார் சொத்து சம்மந்தமாக அண்ணன் பழனிச்சாமியிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு ஒருவரைஒருவர் தாக்கி கொண்டனர். இதில் இருவரும் படுகாயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் இருவரும் கொடுத்த புகாரின் பேரில்  எஸ்ஐ  கனகவள்ளி வழக்கு பதிந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

ஆடு திருடியவர்கள் மூவர் கைது: செந்துறை அடுத்துள்ள முதுகுளம் கிராமத்தில்  பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகையில் நேற்று அதிகாலை ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே பாலகிருஷ்ணன் எழுத்து பார்த்த போது மூன்று ஆடுகளை தூக்கி சென்றது தெரியவந்தது.இதனையடுத்து பாலகிருஷ்ணன் போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடுவந்து மூவரையும் பிடித்து தளவாய் போலிசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பெண்ணாடத்தை சேர்ந்த மணிவண்ணன்(24), சூரியமூர்த்தி (24), அகிலன்(19) என்பது தெரியவந்தது. மூவர் மீதும் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர்.

Related Stories: