பள்ளிபாளையம் அருகே சாலையில் பரவி கிடக்கும் ஜல்லிக்கற்களால் அபாயம்

பள்ளிபாளையம், மே 23:  பள்ளிபாளையம் அருகே கண்டிபுதூரில் தண்ணீர் தொட்டிக்கு சுழற்படிக்கட்டு கட்ட  கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் மற்றும் எம்.சாண்ட் சாலையில் பரவி கிடப்பதால், டூவீலர்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து அடிபடுகின்றனர். பள்ளிபாளையம் நகராட்சி கண்டிபுதூர் கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க, கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுழற்படியுடன் கட்டப்பட்டது. இந்த படிகள் பழுதடைந்தால், சீரமைக்கும் பணி மேற்கொண்டனர். இதற்காக சிறு ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் ஆகியவற்றை பயன்படுத்தியவர்கள், பணிகள் முடிந்ததும் எஞ்சிய ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் ஆகியவற்றை அகற்றாமல் சாலையில் போட்டு விட்டுச்சென்றனர். இவை சாலை முழுவதும் பரவியுள்ளது. இதனால் டூவீலரில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து அடிபடுகின்றனர். எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டுமான பொருட்களை உடனடியாக அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: