விவசாயிகளும் தவிப்பு கடும் வெயிலால் நோய் தாக்கும் அபாயம் கால்நடைகளுக்கு உடனே தடுப்பூசி போட வலியுறுத்தல்

கொள்ளிடம், மே 23: கடும் வெயிலில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற தடுப்பூசி போட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள சுமார் 200 கிராமங்களில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளும், ஆயிரக்கணக்கான கோழிகள் மற்றும் நாய் போன்ற செல்ல பிராணிகளையும் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. அதிக வெப்பத்தால், கால்நடைகளை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்ற வருடம் கோடை காலத்தில் பல மாடுகளும், ஆடுகளும் கோமாரி நோய் தாக்கி இறந்துள்ளன. எனவே இந்த வருடம் கால்நடைகளை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்கள் தோறும் கால்நடைத்துறை சார்பில் சிறப்பு முகாம் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடவும் மருந்து மாத்திரைகள் வழங்கவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: