தேசிய டெங்கு தின விழிப்புணர்வு கூட்டம்

தர்மபுரி, மே 23:  தேசிய டெங்கு தின விழிப்புணர்வு கூட்டம், பாலக்கோடு பெல்ரம்பட்டியில் நடந்தது. தர்மபுரி மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், தேசிய டெங்கு தின விழிப்புணர்வு கூட்டம், பாலக்கோட்டில் நடந்தது. கூட்டத்திற்கு பெல்ரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் சிவகுரு தலைமை வகித்து பேசுகையில், ‘டெங்கு நோய் பாதிப்பு அறிகுறிகளான தீவிர காய்ச்சல், கடுமையான உடல் வலி, தலைவலி, சோர்வு போன்றவை தென்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும். டெங்கு பாதிப்பால் தட்டணுக்கள் குறைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இதை தவிர்க்க நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலை சாறு, நிறைய நீராகாரங்கள் அருந்துதல், போதுமான ஓய்வு ஆகியவை பயன் தரும்,’ என்றார். சுகாதார மேற்பார்வையாளர் சேகர், சுகாதார ஆய்வாளர் தமிழ்செல்வம், கிராம சுகாதார செவிலியர்கள் சாந்தா, லோகநாயகி, ஜெயந்தி, கலைச்செல்வி உட்பட பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Related Stories: