விலை குறைவால் பறிக்காமல் செடிகளில் வீணாகும் பப்பாளி

அரூர்,  மே 23:  அரூர் பகுதியில் விலை குறைவால், பறிக்காமல் மரங்களிலேயே வீணாகி வரும் பப்பாளி பழங்கள். தர்மபுரி மாவட்டத்தில் அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி உள்பட பல்வேறு பகுதியில்  சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் பப்பாளி பயிரிடப்பட்டுள்ளது.இங்கிருந்து பெங்களூர், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெரிய ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.தேவைக்கு அதிகமாக பப்பாளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் விலை மிகவும் குறைந்துள்ளது. மொத்த விலையில் கிலோ ₹10 வரை அதிகப்பட்சமாக விற்பனையாகிறது.இதனால் ஒரு சில இடங்களில் தோட்டத்திலிருந்து பப்பாளி பறிக்கப்படாமல் உள்ளது. சில்லறை விற்பனையில் கிலோ ₹20க்கு பப்பாளி விற்கப்படுகிறது.

Related Stories: