20 பள்ளி வாகனங்களை இயக்க தேனியில் தடை கொடுவிலார்பட்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் பெரியகுளம் அருகே வாலிபர் மர்மச்சாவு மூணாறில் குண்டும் குழி சாலைகளால் சுற்றுலா பயணிகள் அவதி

மூணாறு,மே 23: மூணாறின் மையப்பகுதியில் அமைந்துள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் சுற்றுலா வாகனங்கள் ஏராளமானவை மூணாறு வருகின்றன.

ஆனால், மூணாறு மையப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சில நிறுவனங்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தார்ச்சாலைகளை தோண்டி வேலை பார்ப்பதால், இப்பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன.

அத்துடன் மூணாறு முதல் பெரியவாரை உள்ள சாலைகள் பல்வேறு பணிகளுக்காக தோண்டி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு இடையை நான்கு முறை மூணாறின் முக்கிய சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. குடிநீர் வாரியம் சார்பாக குழாய்கள் பதிப்பதற்காக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. பின் குழிகள் மூடப்பட்டன. இதன் பின் தனியார் தொலைத்தொடர்பு நிர்வாகத்தின் கேபிள் பதிப்பதற்காக மீண்டும் சாலைகள் தோண்டப்பட்டன. பின்னர் மண் உபயோகித்து பள்ளங்கள் மூடப்பட்டன. இப்படி பலமுறை தோண்டப்பட்டதால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி தருகின்ன.

மூணாறு சாலைகளில் டிவைடர்கள் நிறுவப்பட்டதன் காரணமாக வீதியின் அகலம் குறைந்துள்ளன. தற்போது சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கூறுகையில், முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படும் மூணாறில் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது கண்டித்தக்கத்தது. சாலை சீரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி சாலைப்பணிகளுக்கு முறையாக பயன்படுத்துவது இல்லை. மழைக்காலம் துவங்குவதற்கு முன்னர் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Related Stories: