ஆண்டிபட்டியில் வறட்சியிலும் கிணற்றுப் பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி

ஆண்டிபட்டி,மே 23: ஆண்டிபட்டி பகுதியில் வறட்சியிலும் கிணற்று பாசானத்தில் விளைந்த நிலக்கடலையை விவசாயியே அறுவடை செய்தனர். Nஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இந்நகரைச் சுற்றி புலிமான்கோம்பை, தருமத்துப்பட்டி, அணைக்கரைப்பட்டி, மறவபட்டி, கதிர்நரசிங்கபுரம், ராமகிருஷ்ணாபுரம் பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, கண்டமனூர், குன்னூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆனால் வறட்சியின் காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றதால், விவசாய நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகியது. இந்நிலையில் மறவபட்டி பகுதியில் வறட்சியிலும் கிணற்று பாசானத்தில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலையை விவசாயிகளே குடும்பத்தோடு அறுவடை செய்தனர். இதுகுறித்து விவசாயி கூறுகையில், `` கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லாததால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிணறுகள் பழுதடைந்து விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

இதனால் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக காணப்படுகிறது. இந்த சூழலில் கிணற்றில் உள்ள தண்ணீருக்கு ஏற்றவாறு நிலக்கடலை சாகுபடி செய்து வந்தேன். இதற்கும் வறட்சியின் காரணமாக போதிய அளவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட சூழ்நிலையிலும் விவசாயத்தின் பரப்பளவை குறைத்துக்கொண்டேன். தற்போது விளைந்த நிலக்கடலையை குடும்பத்தினரோடு அறுவடை செய்து வருகிறேன். விளைந்த நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: