7 பேர் கைது லாம். 20 பள்ளி வாகனங்களை இயக்க தேனியில் தடை

தேனி, மே 23: தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்துத் துறையினர் ஆய்வு செய்ததில் 20 வாகனங்கள் தகுதியிழந்திருந்தது கண்டறியப்பட்டு வாகனம் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் ஆண்டுதோறும், பள்ளி, கல்லூரி வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. கடந்த 11ம் தேதி துவங்கியது. இப்பணி நாளை மறுதினமான (25ம்தேதி) வரை நடக்க உள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள 101 பள்ளிகளை சேர்ந்த 599 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நாளொன்றுக்கு 50 வாகனங்கள் வீதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு வாரகாலமாக நடந்த ஆய்வின்போது, குறைபாடுகள் இருந்தால் குறைகள் நீக்கிய பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதுதவிர வாகன இயக்கத்திற்கே தகுதியில்லாதாக இதுவரை சுமார் 20 வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை வைத்துள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இத்தகைய வாகனங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: