சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு கம்பம் சுவாமிக்கு தீர்த்தம் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

கரூர், மே 23: வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுபவர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.கரூர் பாராளுமன்ற தொகுதி, வாக்கு எண்ணிக்கை இன்று கரூர் தளவாபாளையம் குமாரசாமிபொறியியல் கல்லூரியில் டைபெறுகிறது.நுண்பார்வையாளர்கள், மேற்பார்வையயாளர்கள் சட்டமன்ற தொகுதிவாரியாக கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படடது. தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் அன்பழகன் நேற்று தேர்தல் பிரிவில் நடத்தினார்.வாக்குஎண்ணும் பணியில் ஒவ்வொரு மேசைக்கும் தேர்தல் நுண்பார்வையாளர்கள், வாக்குஎண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு பிரிவுக்கும் 102நபர்கள் என 306 நபர்கள் எந்தெந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குஎண்ணும் அறையில் பணியாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் வகையிலான கணினிகுலுக்கல்முறையை கலெக்டர் நடத்தினார். பார்வையாளர்கள் ஹரிபிரதாப் சாஹி, பிரசாந்த்குமார், வினித் முன்னிலை வகித்தனர்.

 வாக்கு எண்ணிக்கை நுண்பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள்  எந்தெந்த மேசையில் பணியாற்ற உள்ளனர் என்பதற்கான குலுக்கல் இன்று காலை 5மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் எண்ணிக்கைக்கு18நுண்பார்வையாளர், தலா 16 வாக்குஎண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குஎண்ணிக்கை உதவியாளர்கள் என மொத்தம் 80நபர்களுக்கான குலுக்கல் நடைபெறும்.

  இதில் கலெக்டரின் உதவியாளர்கள், செல்வசுரபி, ரவிசந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மீனாட்சி(அரவக்குறிச்சி), காமராஜ்(மணப்பாறை), ராமு(வேடசந்தூர்), கீதா (விராலிமலை), மற்றும்உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: