அமராவதி ஆற்றில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டும்

கரூர், மே 23: அமராவதி நதி தூய்மைப்படுத்தும்பணியை மேற்கொள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்எதிர்பார்க்கின்றனர்.உடுமலையில்உள்ள அமராவதி அணையில் இருந்து கரூர் அமராவதி ஆற்றிற்குதண்ணீர் வருகிறது. நீர்திறப்பில்லாத காலங்களில் சீத்தை முட்கள் காடுபோல வளர்ந்துவிடுகிறது. அவற்றை அப்புறப்படுத்தாததால் ஆற்றில் அவ்வப்போது வரும் நீரையும் சீத்தை முட்கள் உறிஞ்சிவிடுகின்றன. இதுதவிர  கரூர்நகரில் உள்ள கழிவுநீர் ஆங்காங்கே அமராவதி ஆற்றில் கலக்கிறது. கடந்த 20ஆண்டுகளுக்கு முன்னர் கரூர் மற்றும்இனாம் கரூருக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் இந்த திட்டத்தை உள்ளாட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை.  கரூர் நகராட்சியில் இடம்பெற்றுள்ள தாந்தேணி நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் கொணடுவரப்படவில்லை. பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருக்கும் கரூர் நகராட்சியிலோ திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாத நிலை காணப்படுகிறது. இதனால் பல தெருக்களில் உள்ள வீட்டுக்கழிவுகள் அமராவதி ஆற்றில் விடப்படுகிறது. இதனால் அமராவதிஆற்றில் செடிகள் முளைத்துக் காணப்படுகிறது. பசுபதிபாளையம் பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,

பாதாள சாக்கடை திட்டம் 20ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. வடிகால் வாரியம் மேற்பார்வையில் ஒப்பந்த நிறுவனம் பராமரித்து வந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் கரூர் நகராட்சியிடம் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

பாதாள சாக்கடை இணைப்புகொடுப்பது, பராமரிப்பு வேலைகளை செய்வது போன்றவற்றில் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாகவே இருந்துவந்தது. முன்பு கவுன்சிலர்கள் இருந்ததால் இதன் பாதிப்பு பெரிதாக தெரியவில்லை. ஏனென்றால் பிரச்னை மன்றத்தில் வைத்து விவாதிக்கப்படும்.  ஆனால் கடந்த 3ஆண்டாக பதவிக்காலம் முடிந்தும் உள்ளாட்சித்தேர்தலை நடத்தாமல் தனிஅதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிறது அரசு. பல இடங்களில் நகராட்சி வடிகால்களையே ஆற்றுக்குள் விடுகின்றனர்.

 பாதாள சாக்கடை திட்டத்தின்நோக்கமே கழிவுநீர் புதைவடிகால் முறையில் செல்ல வேண்டும் என்பதுதான். நகராட்சியே கழிவுநீரை ஆற்றில்விடும் நிலையில் தனியாரும் சாயப்பட்டறையினர் நடவடிக்கைகள் பற்றி கேட்கவே வேண்டாம். அமராவதி நதியை தூய்மைப்படுத்தும்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.

Related Stories: