பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில் முதியவர்கள் தியானம் கற்கும் நிகழ்ச்சி

தர்மபுரி, மே 23: தர்மபுரி மாவட்ட பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், யோகா தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் நிர்வாகிகள் பாக்யா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் தெரிவித்ததாவது: ஜூன் 21ம் தேதி உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்ட பின்னர், பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில் ஜூன் மாதத்தை தியான மாதமாக கொண்டாடி வருகிறோம். மாதம் முழுவதும் பள்ளி கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் தியானம் கற்று தரப்படுகிறது. நடப்பாண்டில் வரும் 26ம் தேதி, மூத்த குடிமக்களுக்காக உன்னத நிலை தரும் முதுமை என்ற தலைப்பில், தியான நிகழ்ச்சி இந்த மையத்தில் நடக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், எளிய முறையில் தியானத்தை கற்றுக் கொள்வது குறித்து, டாக்டர் பிரபாகரன் பயிற்சி அளிக்கிறார். இதில் மூத்த குடிமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். வரும் 29ம் தேதி குழந்தைகளுக்கான பயிற்சி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படுகிறது. இதில் குழந்தைகள் எளிய முறையில் நேரத்தை நிர்வகிப்பது, கோபத்தை கட்டுப்படுத்துவது, ஞாபக சக்தியை பெருக்குவது, தியானம் கற்றல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்துவதற்காக ஓவியப்போட்டி, பாடுவது, நடிப்பது, கராத்தே, நடனம் போன்றவற்றை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த வாய்ப்பை தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: