புளுதியூர் சந்தையில் ₹32 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அரூர், மே  23:  கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூர் சந்தையில், ₹32 லட்சத்திற்கு மாடுகள் விற்பனையானது. அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன் கிழமையில் சந்தை நடைபெற்றுவருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இச்சந்தையில் வாரந்தோறும் கடைகள் போடப்படுகிறது.இங்கு நடைபெறும் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் ₹32 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. மாட்டின் விலை ₹23000  முதல் ₹45200 வரையும், ஆடு விலை ₹4200 முதல் ₹8500 வரை விற்பனையானது.

வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு மாடுகள் அதிக அளவில் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச்சந்தையில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது தீவனப் பற்றாக்குறை மற்றும் வறட்சியால் கால்நடை விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த வாரச் சந்தையில், 500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 300 மாடுகள் விற்பனையானது. ஒவ்வொன்றும் ₹10 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரை விலை போனதாவும், மொத்தம் ₹40 லட்சத்திற்கு விற்பனையானதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் குறைவான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த ஆடுகள் ₹4 ஆயிரம் முதல் ₹6 ஆயிரம் வரை விற்கப்பட்டது. மொத்தம் ₹7 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: