வத்திராயிருப்பு முத்தலாம்மன் கோயிலில் மே 26ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது

வத்திராயிருப்பு, மே 23: விவசாயம் செழிக்க மழை வேண்டி வத்திராயிருப்பு முத்தலாம்மன் கோயில் ஜல்லிக்கட்டு வருகின்ற 26ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.

வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம், கான்சாபுரம், மகாராஜபுரம் உள்ளிட்ட ஊர்களுக்குள் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வத்திராயிருப்பில் கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்குள் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தற்போதுள்ள நிலையில் ஜல்லிக்கட்டு ஊருக்குள் நடைபெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஊருக்கு வெளியே தாணிப்பாறை செல்லும் வழியில் வத்திராயிருப்பு அனைத்து சமுதாய ஊர் பொதுமக்கள் மற்றும் காளை வளர்ப்போர் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு மே 26 அன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளதால் வாடிவாசல் மற்றும் மேடை அமைக்கப்படுகிறது. வத்திராயிருப்பு சேதுநாராயணபுரம், கான்சாபுரம், புதுப்பட்டி, மகாராஜபுரம், கூமாப்பட்டி, மதுரை மாவட்டம், தேனி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து 300 காளைகள் பங்கேற்கின்றன. 150 வீரர்கள் காளைகளை அடக்குகின்றனர். பிடிபடாத மாடுகளுக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் கட்டில், பீரோ, அண்டா, குத்துவிளக்கு, தங்கம், வௌ்ளி நாணயங்கள் பரிசுகள் வழங்கப்படுகிறது.

ஏற்பாடுகளை முத்தாலம்மன் ஜல்லிக்கட்டுக்குழு மற்றும் வத்திராயிருப்பு காளை வளர்ப்போர் செய்து வருகின்றனர்.

Related Stories: