வாக்கு எண்ணிக்கை மையத்தில் நுண்பார்வையாளர்களின் பணிகள் குறித்த பயிற்சி

காஞ்சிபுரம், மே 23: காஞ்சிபுரம் மாவட்டம் மக்களவைக்கான பொதுத் தெர்தல் 2019 மற்றும் திருப்பொரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில், மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் பொன்னையா நுண் பார்வையாளர்களின் பணிகள் குறித்த பயிற்சியினை நடத்தினார்.காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதி மற்றும் திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் அனைத்தும் அண்ணா பொறியியல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியிலும், பெரும்புதூர் மக்களவை தொகுதிக்கு, தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் நுண் பார்வையாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் உதயாலட்சுமி, யோகேஷ் மகசி, டெபசிஸ்தாஸ், மஜீனூர் ஹூசைன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் பொன்னையை பயிற்சி வழங்கினார்.பயிற்சியில் தேசிய மையத்தை சேர்ந்த வங்கி பணியாளர்கள், கல்பாக்கம் அணுமின் நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் கலந்துகொண்டனர்.பெரும்புதூர் மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) நாராயணன், (தேர்தல் ) அமீதுல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: