வைகுண்டம் வடகால் வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள் நோய் பரவும் அபாயம்

வைகுண்டம், மே 23: வைகுண்டம் வடகால் வாய்க்காலில் குறைந்த அளவில் காணப்படும் தண்ணீரில் செத்து மிதக்கும் மீன்களால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. வைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணைப்பகுதியிலிருந்து வடகால், தென்கால் என இரு வாய்க்கால்கள் பிரிகின்றன. வடகால் வாய்க்காலில் இருந்து நேரடி ஆயக்கட்டாக 3289 ஏக்கர் நிலங்களும் குளத்து பாசனனமாக 9511 ஏக்கர் நிலங்களும் பயனடைகின்றன. தென்கால் வாய்க்காலில் இருந்து நேரடி ஆயக்கட்டாக 2,693 ஏக்கர் நிலங்களும்,  குளத்துப் பாசானமாக 10,767 ஏக்கர் நிலங்களும் பயனடைகின்றன. தாமிரபரணி அணையில் தண்ணீர் குறைந்து மணல் மேடாகி வருகிறது. இதனிடையே வடகால், தென்கால் வாய்க்காலிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு வருகின்றன.  இந்நிலையில் வடக்கு வாய்க்காலில் குறைந்த அளவிலேயே காணப்படும் தண்ணீரில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்துள்ள மக்கள்,  இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: