தூத்துக்குடியில் முதலாமாண்டு நினைவுதினம் அனுசரிப்பு துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு அரசியல் கட்சியினர் மலர் அஞ்சலி

தூத்துக்குடி, மே 23: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பலியான 13 பேருக்கு, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22, 23ம் தேதி நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 13 பேர் பலியாகினர். இந்த சோக சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பலியான 13 பேரின் படங்களுக்கும் பல்வேறு கட்சியினர் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் திமுக மகளிர் அணி மாநில செயலாளரும், எம்பியுமான  கனிமொழி தலைமை வகித்தார். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர்நீத்தோரின் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மதியழகன், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மகளிர் அணி கஸ்தூரி தங்கம், மாநகர துணைச்செயலாளர் கீதா முருகேசன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ரவிந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் பாலன், கதிரேசன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், நிர்வாகிகள் செல்வின், மகளிரணி  இந்திரா, பார்வதி, தங்கம் செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், நிர்வாகிகள் செல்வராஜ், ஆறுமுகம், குருசாமி, கோட்டுராஜா, ஜெயகுமார் ரூபன், சுரேஷ்குமார், பிரதீப்,  பாலசுப்பிரமணியன், செல்வின், மதிமுக மாநில துணைச் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் ரமேஷ்,  செல்வம், இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், நிர்வாகிகள் நக்கீரன், முருகபூபதி, மகாராஜன்,  காங்கிரஸ் நிர்வாகிகள்  முரளிதரன், டேவிட் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் அழகுமுத்து பாண்டியன், மாடசாமி,  தமிழர் தேசிய கொற்றம் வியனரசு உள்ளிட்டவர்களும் கூட்டணி கட்சியினரும் திரளாகப் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் சார்பில் தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அஞ்சலி கூட்டமும் நடந்தது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன், சிஐடியூ மாவட்டச் செயலாளர் ரசல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முத்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் சுந்தரராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.

தூத்துக்குடி அமமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ், துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேருக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார். மீனவர் அணி மாநில துணைச் செயலாளர் சுகந்திகோமஸ், தொழிற்சங்க நிர்வாகி சண்முககுமாரி, இணைச் செயலாளர் ஸ்டீபன், மகளிர் அணி இணைச் செயலாளர் விஜயலட்சுமி,  பேரவை இணைச் செயலாளர் ராமச்சந்திரன்,  அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் இசக்கிசெல்வம், வட்ட செயலாளர் காசிலிங்கம்,  தொழில்நுட்ப அணி சிவா, கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு மாநில தீர்மானக்குழு செயலாளர் மணிவேந்தன், மாவட்டச் செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர் அணி விநாயகா ரமேஷ், மீனவர் அணி நக்கீரன், நிர்வாகிகள்  வீரபாண்டி சரவணன், செல்லச்சாமி, செல்லத்துரை, சுந்தர்ராஜ், மகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதேபோல அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற  தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் மாவட்டச் செயலாளர் சந்தனசேகர்  தலைமையில் இரங்கல் தினம் நடந்தது.  ஏஐடியுசி மாநில செயலாளர் மணி ஆசாரி, இளைஞர் பெருமன்ற தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் பாலமுருகன், இந்திய வக்கீல்கள்  சங்க அமைப்பாளர் சுராமசந்திரன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாந்தன், சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன், தமிழர் விடியல் கட்சி மாவட்டச் செயலாளர் சந்தனராஜ் பேசினர். தூத்துக்குடி அமமுக சார்பில் கிழக்கு பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள்  மலர் அஞ்சலி செலுத்தினர். இதே போல் குளத்தூர் அருகேயுள்ள சிப்பிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் மக்கள், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: