ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா கோயிலில் 8ம் பூஜை விழா

கடையம், மே 22:  ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயிலில் நேற்று 8ம் கொடை விழா பூஜைநடந்தது. ஆழ்வார்குறிச்சி ராமநதி ஆற்றின் கரையின் தென்புறம் பிரசித்தி பெற்ற 141 கிராம சேனைத்தலைவர் சமுதாய வரிதாரர்களுக்கு பாத்தியப்பட்ட காக்கும் பெருமாள் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொடை விழா நடைபெறும். இந்தாண்டு கொடை விழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி கால்நாட்டு வைபவம் நடந்தது. கடந்த 14ம் தேதி கோயில் கொடை விழா நடந்தது. இதில் பட்டாணிபாறையில் பழம் எறிதல் நிகழ்ச்சியில் வீசபட்ட பழத்தை பிரசாதமாக பக்தர்கள் எடுத்துச் சென்றனர். கடந்த 15 ம் தேதி காலை 10 மணிக்கு சின்ன நம்பி பூஜை வைபவம் நடந்தது. இதனையடுத்து நேற்று எட்டாம் பூஜை திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் வளர்ச்சி நல கமிட்டியினர் செய்திருந்தனர்.

Related Stories: