வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அவினாசி, மே 22: அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி, பழங்கரை ஊராட்சி  பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவின்பேரில், அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்திலட்சுமி தலைமையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி ஆகியோர் மேற்பார்வையில் 15 பேர் கொண்ட குழுவினர் வேலாயுதம்பாளையம் ஊராட்சி அவிநாசி, கோவை, ஈரோடு மெயின் ரோடு, ஆட்டையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், ராமலிங்கம், ஊராட்சி உதவியாளர்கள் பழங்கரை செல்வம், செம்பியநல்லூர் லோகநாதன், வேலாயுதம்பாளையம் பரமேசுவரன், புதுப்பாளையம் சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த மற்றும் இருப்பு வைத்திருந்த  மொத்த விற்பனையாளர்கள், பேக்கரிகள், தள்ளுவண்டிகள், மளிகை கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர் உட்பட 255 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.16 ஆயிரம் அபராதம் விதிப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் விற்பனை செய்தால், ரூ.ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், மேலும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories: