குன்னூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குன்னூர், மே 22: குன்னூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் வழியே செல்லும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிவருகிறது.

குன்னூர் நகர் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் கன்னி மாரியம்மன் கோயில் பகுதிக்கு செல்லும் முக்கிய தண்ணீர் குழாய் உள்ளது. குன்னூர் பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதால் பணம் கொடுத்து, குடங்களில் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

குன்னூர் நகரின் முக்கிய நீர் ஆதாரமாக ரேலியா அணையில் தண்ணீரின் அளவு 38 அடி உள்ள நிலையில், குன்னூர் நகரில் 20 நாட்களுக்கு ஒருமுறை  தண்ணீர் விநியோகம் செய்வதால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், குன்னூர் பேருந்துநிலையத்தில் வழியே செல்லும் நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. கடை உரிமையாளர்கள் குன்னூர் நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து இரண்டு நாட்கள் ஆகியும், அங்கு எவ்வித அதிகாரிகளும் வரவில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வரும் சம்பவம் குன்னூர் பொது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: