குன்னூர் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் வீணாகும் பேரிகார்டு

குன்னூர், மே 22: நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் நடைபெற்று வருவதால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் போர்டுகள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வருகிறது, அதிகளவிலான பேரிகார்டுகள் வைக்கப்படுவதால் சுற்றுலாபயணிகள் எளிதில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்த பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் எச்சரிக்கை வாசகங்களுடன் இருப்பதால் இரவு நேரங்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏற்படாதவாறு அமைக்கப்பட்டது. இந்நிலையில், குன்னூர் நகரில் உள்ள காவல்துறையினரின் போர்டுகள் முறையாக பராமரிக்கபடாததால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவிவருகிறது. அதில் அமைக்கப்பட்டிருந்த எதிரொலிக்கும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பேரிகார்டுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: