சில்லார அள்ளியில் வீடுகள் முன் பிளாஸ்டிக் குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

கடத்தூர், மே 22: சில்லாரஅள்ளியில், வீடுகள் முன் பிளாஸ்டிக் குப்பை எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசு மற்றும் விபத்து அபாயம் நிலவுகிறது. இதை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கடத்தூர் அடுத்த சில்லாரஅள்ளியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் விவசாயம், கூலி மற்றும் பல்வேறு வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும், குடியிருப்பு பகுதியில் சேகராமாகும் குப்பை கழிவுகளை அருகில் உள்ள கிணற்று பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதில், தர்மபுரி -பொம்மிடி சாலையில் தனியார் கிணற்றுப் பகுதியில், அதிகம் கொட்டப்பட்டு, மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்படுகிறது. மேலும், அருகிலேயே வீடுகள் மற்றும், இந்தியன் வங்கி செயல்படுகிறது. இதில், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், குப்பை எரிக்கப்படும் போது, அதிலிருந்து வரும் புகையால், கண் எரிச்சல் அடைந்து தவிப்பிற்குள்ளாகி வருகின்றர். எனவே, ஊராட்சி நிர்வாகம், உரிய இடங்களில் குப்பை தொட்டி வைத்து அதில் குப்பைகள் கொட்ட வேண்டும், அதே போல் குப்பைகள் மீது நெருப்பு வைத்து எரித்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: