தர்மபுரியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

தர்மபுரி, மே 22: தர்மபுரியில் அறிவிப்பு இல்லாத மின்வெட்டால், பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் வட்டார வளர்ச்சி காலனி உள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஆவின் பால் குளிரூட்டும் நிலையம், உழவர் சந்தை, நகர அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டது. 4.45 மணிக்கு தான் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. சுமார் ஒன்றே முக்கால் மணிநேரம் மக்கள் கொசுக்கடியிலும், புழுக்கத்திலும் அவதிப்பட்டனர். இதேபோல், நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு அரை மணி நேரம் கழித்து வந்தது. தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலை பகுதியில் மட்டும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீராக மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: