கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

தேனி, மே 22:  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தேனி மாவட்ட பிரிவின் சார்பில் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 16 வயதுக்குட்பட்டோருக்கான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த மே 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்தது.  இதில் மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளை சேர்ந்த 99 மாணவர்கள், 47 மாணவியர் என மொத்தம் 146 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றனர்.

இப்பயிற்சி காலத்தில் தடகள போட்டிகளான ஓட்டம், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், கூடைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு  பயிற்சி அளிக்கப்பட்டது.  பயிற்சி காலம் முடிவடைந்ததையடுத்து நேற்று தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் தலைமை வகித்தார்.  இவ்விழாவில் மாவட்ட தடகள சங்க தலைவர் அஜய்கார்த்திக் மற்றும் கால்பந்து கழக மாவட்ட தலைவர் மனோகரன் கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

Related Stories: