சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

சின்னமனூர், மே 22:  சின்னமனூர் பகுதியில் சரக்கு வாகனங்களில் தொழிலாளர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. சின்னமனூர் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் எல்லாம் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. மேலும் சில தொழிற்கூடங்கள், சிறு தொழில்கள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் பயணிக்கின்றனர். அவைகளில் கூட்டமாக ஏறி நின்று கொண்டு வேகமாக பயணிக்கின்றனர்.

இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பெரும் உயிர்ப்பலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  மக்கள் கூறுகையில், கூலி தொழிலாளர்கள் விவசாய வேலைகளுக்கு செல்கிற போது டெம்போக்களில் துணி மூட்டைகளை அமுக்குவதை போல் ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: