லால்குடி அருகே செல்போன் டவர் டிரான்ஸ்பார்மர் பாக்ஸ் திருட்டு4 பெண்கள் உட்பட 5 பேர் கைது

லால்குடி, மே 22:  லால்குடி அருகே செல்போன் டவரில் உள்ள டிரான்ஸ்பார்மர் பாக்சை திருடிய 4 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். லால்குடி அருகே கொப்பாவளி பகுதியில் இருந்து சாத்தமங்கலம் கிராமத்துக்கு செல்லும் பிரிவு சாலையில் தனியார் செல்போன் டவர் உள்ளது. இதில் ஆதிகுடி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் டவர் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இந்த செல்போன் டவர் தலைமை அலுவலகத்துக்கு டவரில் உள்ள டிரான்ஸ்பாரின் மெயின் ஸ்விட்ச்சை ஆப் செய்யப்பட்டுள்ளது என எஸ்எம்எஸ் சென்றது. இதை பார்த்த அதிகாரி டவர் டெக்னீசியன் செந்தில்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்ட செல்போன் டவருக்கு சென்று பார்வையிடுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற செந்தில்குமார் டவரின் டிரான்ஸ்பார்மர் பாக்ஸ் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த டிரான்ஸ்பார்மர் பாக்ஸில்  காப்பர் கம்பி உள்ளது. மேலும் அப்பகுதியில் குப்பைகளை பொறுக்குவது போல் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் மீது இவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து லால்குடி போலீசாருக்கு செந்தில்குமார் தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர்கள் திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமார் (55), கலைவாணி(35), மாரியம்மாள்(38), மாரியாயி(45), கீதா(40) என்பதும், இவர்கள் 5 பேரும் செல்போன் டவரை கண்காணித்து, டவரில் உள்ள ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 111 கிலோ மதிப்புள்ள காப்பர் கம்பிகள் கொண்ட டிரான்ஸ்பார்மர் பாக்சை திருடியது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் லால்குடி எஸ்ஐ சரத்குமார் 5 பேர் மீது வழக்குப்பதிந்து  கைது செய்தனர்.

Related Stories: