திருத்துறைப்பூண்டியில் 2 நாள் நெல் திருவிழா பங்கேற்க முன்பதிவு செய்யலாம்

திருத்துறைப்பூண்டி, மே 22: இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வாரால் 2006ல் துவங்கப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக ஜனாதிபதி விருந்து பெற்ற இயற்கை வேளாண் போராளி மறைந்த நெல் ஜெயராமனால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான நெல் திருவிழா இவ்வாண்டு அவர் மறைந்த நிலையில் 13ம் ஆண்டு தேசிய அளவிலான நெல்திருவிழா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஏஆர்வி திருமண மண்டபத்தில் ஜூன் 8, 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் வேளாண் அறிஞர்கள், வேளாண்துறை உணவுத்துறை உயர் அதிகாரிகள், இயற்கை வேளாண் வல்லுனர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்க உள்ளனர்.

விழாவில் 174 வகையான பாரம்பரிய நெல் ரக விதைகள் இலவசமாக தலா 2 கிலோ வீதம் 6 ஆயிரம் உழவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

சித்த மருத்துவர் சிவராமன் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சிமைய மருத்துவர் மல்லிகா தலைமையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவ முகாம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

மேலும் பாரம்பரிய நெல்  சாகுபடி, உற்பத்தியாளர் நிறுவனங்கள் துவங்குதல், வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல், பாரம்பரிய அரிசியில் உள்ள சத்துக்கள், நபார்டு திட்டங்கள், பருவ நிலைக்கேற்ப சாகுபடி தொழில்நுட்பங்கள் போன்ற கருத்துரைகளும் இடம் பெற உள்ளது. விழாவில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ள கீழ்க்–்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 04369&220954, 9976141780, 9843749663, 9842607609 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் தெரிவித்துள்ளார்.

Related Stories: