கோடங்குடி கிராமத்தில் ஓராண்டாக வீணாகும் கொள்ளிடம் கூட்டு குடிநீர்

தா.பழூர், மே22 : கோடங்குடி கிராமத்தில் ஓராண்டாக   கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் வீணாகிறது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி  கிராமத்தில் கடந்த 1 வருட காலமாக  வீணாகி வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர். ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கோடங்குடி கிராமம் . பிரதான சாலை ஓரம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வருடங்களுக்கு மேலாக தண்ணீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு விடுத்துள்ளனர்.

மேலும் இந்த தண்ணீர் சாலையோரம் வீடுகளுக்கு முன்பு தேங்கி சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசுவதோடு, ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் நீரில் பன்றிகள், நாய்கள், எருமை மாடுகள் உள்ளிட்டவை அசுத்தம் செய்கின்றன. இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. வீடுகளுக்கு முன்பு தண்ணீர் தேங்கி நிற்பதால் செடிகள் அதிகமாகி இருப்பதாலும் முட்புதர்கள் போல் உள்ளதால் அவற்றில் பாம்பு ,தேள் போன்ற விஷ பூச்சிகளாலும் அவ்வப்போது இடர்பாடுகளை சந்தித்து வருவதாகவும்.இதனால் இந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருப்பதால் நோய் தொற்றும் ஏற்பட கூடிய சூழல் உருவாகி உள்ளது. சாலையோரம் உள்ள பள்ளம் பெரிய அளவில் இருப்பது தான் தண்ணீர் வெளியேறாததற்கு காரணம் என்றும். மழை காலங்களில் தண்ணீர் வீடுகள் அளவிற்கு உயர்ந்து வீட்டினுள் தண்ணீர் நுழைந்து மிகவும் சிறமமான நிலை ஏற்படுவதாகவும்,தொடர்ந்து இந்த நிலை ஏற்படாமல் இருக்க தண்ணீர் தேங்காமல் வெளியேறும் வண்ணம் சரி செய்ய வேண்டும்.இந்த கொள்ளிட கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து வரும் நீரானது மழை காலங்களில் தண்ணீர் அதிகமானால் வெளியேறுவதற்கு ஏரியில் இருந்து அமைக்கப்பட்ட வடிகால் வாய்காலில் ஏரியை நோக்கி சென்றவாறு உள்ளது.கோடை காலத்தில் மக்கள் தண்ணீருக்கு தவிக்கும் வேனையில் இது போல் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: