பெரியகருக்கையில் குடிநீர் தட்டுப்பாடு போக்க விரைந்து நடவடிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம், மே 22: பெரியகருக்கையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நேற்று நடந்தது. கிளை தலைவர் கவர்னர் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராமநாதன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பெரியகருக்கை ஊராட்சி, நாகம்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 3 மாதமாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் நீக்க வேண்டும். தண்ணீர் வசதியின்றி மூடி கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும். ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் சுந்தரராஜன், மாவீரன், சாந்தி, மகேஸ்வரி,  ரகுராமன், மாரியம்மாள், ஐயப்பன், குமாரி, சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

Related Stories: