பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை ஊடகத்தினர், முகவர்களுக்கு ஒவ்வொரு சுற்றாக மைக்கில் ஒலிபரப்பப்படும்

பெரம்பலூர்,மே.22: பெரம்பலூர் பாராளு மன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணி க்கை நாளை நடக்கிறது. 2 கட்டிடங்களில் நடக்கும் வாக்குஎண்ணிக்கை விபரங் கள் ஊடகத்தினருக்கு, முகவர்களுக்கு தெரிவிக்கப்படும்போது ஒவ்வொரு சுற் றாக மைக்கிலும் ஒலிபரப்பப்படும். தமிழகம் புதுவையிலுள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று தேர்தல் நடை பெற்றது. அதன்படி பெரம்பலூர் பாரா ளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்ட மன்றத் தொகுதிகளில் இருந்து பதிவான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்க ளில் பெரம்பலூர் கொண்டுவரப்பட்டன. அதில் தனலெட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரி தரை தளத்தில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி, முதல் தளத்தில் குளித்தலை சட்டமன்றத் தொகுதி, 2ம் தளத்தில் முசிறி சட்டமன்றத் தொகுதி, மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் பாலி டெக்னிக் கல்லூரியின் தரை தளத்தில் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, முதல் தளத்தில் துறையூர் சட்டமன்றத் தொகுதி, 2ம் தளத்தில் லால்குடி சட்டமன் றத் தொகுதி, வாக்குச்சாவடி மையங்க ளில் பயன்படுத்தபட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் வி.வி.பேட் கருவிகள் உள்ளிட்ட வை பாதுகாப்பாக வைத்துப் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் பணிகளில் கண்கா ணிப்பாளர், உதவியாளர்கள், நுண்பா ர்வையாளர் என 306 நபர்கள் ஈடுபடவுள் ளனர். அதன்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 14மேஜைகளில் வைக்கப்  பட்டு, பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. இதில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகு தியில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும்,  லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாகவும், மண்ணச்ச நல்லூர் சட்ட மன்றத் தொகுதியில் பதிவான வாக்கு கள் 20 சுற்றுகளாகவும், முசிறி சட்டமன்ற த்தொகுதியில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாகவும், துறையூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Related Stories: