பெரம்பலூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கம்பன் நகர் மக்கள் சாலை மறியல்

பெரம்பலூர்,மே22: தலைநகர் பெரம்பலூரில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப் பாடு நிலவுகிறது.  குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கம்பன்நகர் பகுதி பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் நகராட்சியில் பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய 3பகு திகளும்,அவற்றில் மொத்தம் 21 வார்டுகளும் உள்ளன. 2ம்நிலை அந்தஸ்து கொண்ட பெரம்பலூர் நகராட்சியில் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இதன் குடிநீர்த் தேவையைப் போக்குவதற்காக எளம்பலூர் உப்போடை, செங்குணம் பிரிவு ரோடு, துறைமங்கலம், ஆலம்பாடிரோடு, கலெக்டர்அலுவலகவளாகம் உள்ளிட்டப் பல் வேறு இடங்களில் குடிநீர்க் கிணறுகள் உள்ளன. இதிலிருந்து பெறப்படும் குடிநீர் போ தாத நிலையில் கடந்த திமுகஆட்சியில், தமிழ்நாடுகுடிநீர் வடிகால்வாரியத்தின் மூலம் திருச்சி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டுவருவதற்காக கொள்ளி டம் கூட்டுக் குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இருந்தும் தொடர்ந்து 2ஆண்டுகளாக மழையின்மை,கடுமையான வறட்சி போன் றவற்றால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது, அடிக்கடி மின்தட்டுப்பாடு ஆகியவற்றால் பெரம்பலூர் நகரமக்களின் குடிநீர்த் தேவையை பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தால் தீர்த்துவைக்க முடியவில்லை. இதன்காரணமாக குடிநீர் விநியோகம் பலவார்டுகளுக்கு 2வாரங்களுக்கு மேலாக தரப்படாமல் இருந்துவருகிறது. அனல்காற்று வீசிவரும் சூழலில் குளிப்பதற்கு இல்லாவிட்டாலும், குடிப்பதற்காகவாவது தண்ணீர் விடமாட்டார்களா என ஏங்கித்தவிக்கும் பொதுமக்கள் பொங்கியெழுவதால் அடிக்கடி குடிநீர் பிரச்சனைக் காக சாலைமறியல் போராட்டங்கள் நடந்துவருகிறது. பெரம்பலூரில் ஏற்கனவே துறை மங்கலம்,சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம் ஆகியப்பகுதிகளில் சாலைமறியல்கள் நடந் துள்ள நிலையில் நேற்று 15வதுவார்டு, கம்பன்நகர் பகுதியில் கடந்த 2வாரங்களாக குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் திருச்சி ஆத்தூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து பெரம்பலூர் நகராட்சிஆணையர்(பொ) ராதா, ஓவர்சியர் பிரஷாத் மற்றும் டவுன்போலீசார்அங்குவந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சம ரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு உடனே குடிநீர் விநியோகிப்பதாக நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக அளிக்கப்பட்ட உறுதியை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக திருச்சி ஆத்தூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: