ஜெயங்கொண்டத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

ஜெயங்கொண்டம், மே 22: ஜெயங்கொண்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி போலீசார்  பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு பேரணிகள் நடத்தியும் அச்சத்தை போக்க விழிப்புனர்வை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 290 வாக்குச்சாவடி மையங்களில்  பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வண்ணம் கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டு  போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது.

இதுபோல தற்போது நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் நாளை வாக்கு எண்ணப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கவும், எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும் அரியலூர் எஸ்பி சீனுவாசன் தலைமையிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 75 சிறப்பு காவல்படையினர், 20 ஆயுத காவல்படையினர், சட்டம் ஒழுங்கு பிரிவு காவலர்கள் 35பேர் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். அணிவகுப்பானது அண்ணாசிலையில் துவங்கி கடைவீதி, நான்குரோடு, தா.பழூர் ரோடு, வழியாக டிஎஸ்பி அலுவலகத்தில் முடிவடைந்தது.

Related Stories: