ஆக்கூரில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு

செம்பனார்கோவில், மே22: நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்து ஆக்கூரில் சுகாதார துறை சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ஆக்கூர் ஊராட்சியில் உள்ள கிராம மக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தினர். இதில் ஆக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில் ஆக்கூர் சுற்று பகுதிகளான சிதம்பரம் கோவில்பத்து, ஆக்கூர் முக்கூட்டு, இரட்டைக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் சந்திரகுமார் பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசுகையில், வீட்டில் உள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும். தொட்டிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் மட்டைகள் உள்ளிட்ட வைகளை அப்புறப்படுத்த வேண்டும். மேல்நிலை தண்ணீர் தொட்டிகளை திறந்து வைக்காமல் இருக்க வேண்டும் போன்றவற்றை எடுத்து கூறினார். மேலும் பொதுமக்களுக்கு இடைவிடாத காய்ச்சல் இருந்தால் உடனே ஆக்கூர் வட்டார மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் மேற்பார்வையாளர் வெங்கடேசன் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் குணசேகர், சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார் சமுதாய சுகாதார செவிலியர் வாசுகி பகுதி சுகாதார செவிலியர் குமுதா ஊராட்சி செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: