மக்கள் நலவாழ்வு சங்கம் வலியுறுத்தல் வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு

கரூர், மே 22: வெங்காயம் விலை கிடுகிடுவெனஉயர்ந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் பெல்லாரி வெங்காயம் எனப்படும் பெரிய வெங்காயம் பெங்களூர் மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது. சின்னவெங்காயம் கிணற்றுப்பாசனத்தில் பரவலாக விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். மேலும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்தும் வரத்து இருக்கிறது. உழவர்சந்தைகளில் கடந்த மாதம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20ஆக இருந்தது ரூ.40ஆக

உயர்ந்து விட்டது. கடைகளில் ரூ.50முதல் ரூ.60வரை விற்பனை செய்கின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு கிலோ ரூ,10முதல் ரூ12வரையே விலை கிடைக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் சாகுபடி கிணற்றுப் பாசனத்தில் செய்துவருகிறோம். நீர்பற்றாக்குறை உள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.70ஆயிரம் வரை செலவாகிவிடுகிறது. ஏக்கருக்கு 7 டன் வரை அறுவடை செய்யலாம். தண்ணீர் பிரச்சனை, வெயிலின் தாக்கம் போன்ற காரணங்களினால் ஏக்கருக்கு 3டன்மட்டுமே அறுவடை செய்ய முடிகிறது. விலை இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது இப்போது தான். கிலோவுக்கு ரூ.15வது விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். அப்போதுதான் கட்டுப்படியாகும். இதனால் வேன்களில் கொண்டுபோய் விற்பனை செய்தாலும் வேன் வாடகை ஆள் கூலி என ரூ.25க்கு மேல் விற்பனை செய்ய முடிவதில்லை. அரசின் வேளாண் வணிகத்துறை சார்பில் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குளிர்பதன கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தும்  நடவடிக்கை இல்லை என்றனர்.

Related Stories: