கோயில்பதாகை ஏரியில் மணல் திருடிய 2 டிரைவர்கள் கைது

ஆவடி, மே 22:  ஆவடி அடுத்த கோயில்பதாகை ஏரியில் மணல் திருட்டு நடைபெறுவதாக திருமுல்லைவாயல் வருவாய் அலுவலர் சரஸ்வதிக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதனையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவாய் அதிகாரிகளுடன் சென்றனர்.அப்போது அங்கு ஒரு லாரியில் பொக்லைன் மூலம் மணல் திருடி ஏற்றியது தெரிந்தது. உடனே போலீசார் மணல் திருடிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் மணல் திருடிய 2 டிரைவர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

விசாரணையில் பூந்தமல்லி அருகே தண்டலம் கிராமம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராஜா (27) மற்றும் ஆவடி ஆரிக்கம்பேடு கிராமம், பெரியார் தெருவை சேர்ந்த பொக்லைன் டிரைவர் ஆறுமுகம் (32) என தெரிந்

தது.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் கோர்ட்டில் அவர்களை  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.  சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘புழல், கொரட்டூர், அயப்பாக்கம், விளிஞ்சியம்பாக்கம், அண்ணன் ஏரி, திருநின்றவூர் ஏரி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மணல் திருட்டு நடைபெறுகிறது. இந்த திருட்டிற்கு ஆளும் கட்சி பிரமுகர்களும், சமூக விரோதிகளும் உடந்தையாக இருக்கின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஏரியில் மணல் திருட்டை தடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: