தேவதானப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு

தேவதானப்பட்டி, மே 21: தேவதானப்பட்டி பகுதியில் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, காமக்காபட்டி, சாத்தாகோவில்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, முதலக்கம்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்பட 30க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. விவசாயிகள் தாங்களின் விளைநிலங்களில் சாகுபடிக்காக 500 முதல் 800 அடிவரை போர்வெல் அமைத்து வருகின்றனர். இதற்காக ரூ.2லட்சம் வரை செலவு செய்கின்றனர். ஆனால்இ சில மாதங்களிலேயே தண்ணீர் வற்றி போர்வெல் பயனற்று போகிறது. இதே நிலைமைதான் குடிநீர் கிணறு மற்றும் போர்வெல்லிற்கு ஏற்பட்டு வருகிறது. பருவமழை காலங்களில் ஏரி, குளம், கண்மாய், தடுப்பனைகள் தூர்வாரி தண்ணீரை சேமித்து வந்தால் மட்டுமே கோடைகாலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்க  முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தற்போது பெரும்பாலான இடங்களில் தேவதானப்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

Related Stories: