ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டம் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது

கம்பம், மே 21: ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழக ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் ஆகிய ஏழுபேரின் விடுதலையை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கம்பம் தலைமை தபால் அலுவலகம் முன்பாக தமிழக ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதிமுக நகர செயலாளர் ராமகிருஷ்ணன், சிபிஐ நகரச்செயலாளர் கல்யாண சுந்தரம், மக்கள் அதிகாரம் ஒருங்கினைப்பாளர் மோகன், நாம் தமிழர்கட்சி நகர செயலாளர் தங்கபாண்டி, ஆதித்தமிழர்பேரவை நகர செயலாளர் முருகன், சிபிஎம் சிறுபான்மை நலக்குழு பொறுப்பாளர் அக்பர்,

சிஐடியு தொழிற்சங்க தலைவர் ஜீவா, ஆட்டோ சங்க தலைவர் பாலகுருநாதன், மாற்றுத்திறனாளி சங்க பொறுப்பாளர் அய்யப்பன்,  வாலிபர் சங்க ஏரியா தலைவர் தமிம் சேட், செயலாளர் அசோக் குமார், பொருளாளர் பகத்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏழுபேர் விடுதலையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதே போல தேனி தலைமை தபால் அலுவலக வளாகத்தில் தபால் கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், வெளிச்சம் அறக்கட்டளைத் தலைவர் சிதம்பரம், வக்கீல்.முத்துராமலிங்கம், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன், வாலிபர் சங்க தேனி தாலுகா செயலாளர் பெத்தலீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விகாரி வருடம் வைகாசி மாதம் 7ம் நாள், செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.

திதி: திருதியை மறுநாள் பின்னிரவு 3.25 மணி வரை; அதன் பிறகு சதுர்த்தி. நட்சத்திரம்: மூலம் மறுநாள் அதிகாலை 5.12 மணி வரை; அதன் பிறகு பூராடம்.

யோகம்: அமிர்தயோகம் மறுநாள் அதிகாலை 5.12 மணி வரை; அதன் பிறகு சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 8-9, மதியம் 12-1, இரவு 7-8.

ராகு காலம்: மாலை 3.00 முதல் 4.30 மணி வரை.

எமகண்டம்: காலை 9.00 முதல் 10.30 மணி வரை.

வானிலை

இன்று

அதிகபட்சம்

குறைந்தபட்சம்

35 C /95 F

24 C / 75.2 F

நாளை

அதிகபட்சம்

குறைந்தபட்சம்

37 C / 98.6 F

25 C / 77 F

Related Stories: