கொலையா என விசாரணை தேனி மக்களவை தொகுதியில் மறுவாக்குப்பதிவுக்கு பிறகு 11,55,537 வாக்குகள் பதிவு

தேனி, மே 21: தேனி மக்களவை தொகுதியில் மறுவாக்குப்பதிவுக்கு பிறகு 11 லட்சத்து 55 ஆயிரத்து 537 வாக்குகள் பதிவாகி உள்ளன. தேனி மாவட்டத்தில், தேனி மக்களவை தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் கடந்த ஏப். 18ம் தேதி நடந்தது.  தேர்தல் முடிவடைந்து 15 நாட்கள் கழித்த நிலையில், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 67க்கும், பெரியகுளம் சட்டமன்றத்திற்குட்பட்ட வடுகபட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 197க்கும் மறுவாக்குப்பதிவு மே 19ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று முன்தினம் மறுவாக்குப்பதிவு நடந்தது. மறுவாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேனி மக்களவை தொகுதி மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் பதிவாகியுள்ள வாக்குகள் விபரம் வருமாறு:  தேனி மக்களவை தொகுதியில் மொத்த வாக்காளர்களான 15 லட்சத்து 54 ஆயிரத்து 510 வாக்குகளில், 11 லட்சத்து 55 ஆயிரத்து 537 வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories: