‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் மரநிழலில் சாப்பாடு... மக்களவை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை

தேனி, மே 21: தேனி மக்களவை தொகுதி ஓட்டு எண்ணிக்கையினை பாதுகாப்பாக நடத்துவது குறித்து திண்டுக்கல் டிஐஜி ஜோஸிநிர்மல்குமார் தேனியில் எஸ்.பி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தேனி மக்களவை தொகுதி ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் (மே 23) கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கையும் இங்கு நடக்கிறது. மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன், அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார், அமமுக, சார்பில் தங்க.தமிழ்செல்வன் போட்டியிடுகின்றனர். துணை முதல்வர் மகனை வெற்றி பெற வைக்க பல்வேறு வகையான முயற்சிகள் நடக்கின்றன. இதற்காக தேவையில்லாமல் 50 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக கொண்டு வரப்பட்டது. இரண்டு ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடந்தது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையின் போது பிரச்னை வர வாய்ப்புகள் உள்ளதாக உளவு போலீஸ் மூலம் எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என தேனி எஸ்.பி பாஸ்கரனும் தெரிவித்துள்ளார். இதனால் ஓட்டு எண்ணும் மையத்தில் துணை ராணுவம், அதிவிரைவு அதிரடிப்படை, ஆயுதப்படை, டிஎஸ்பி, பட்டாலியன் போலீசார் 200க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். தவிர ஆயுதப்படை மற்றும் சட்டம்- ஒழுங்கு போலீசார் 700 பேர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஊர்க்காவல்படையினர் 150 பேர் கல்லுாரி வளாகத்திற்கு வெளியே வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளனர்.

இந்த போலீஸ் படையினை ஒருங்கிணைந்து செயல்படுத்த ஓட்டு எண்ணும் மையத்திற்குள் தனியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அத்தனை இடங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் போது மாவட்டத்தில் எங்கு பிரச்னை வந்தாலும் உடனே கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம், அதிவிரைவு அதிரடிப்படை, ஆயுதப்படை, டிஎஸ்பி பட்டாலியன், சட்டம் ஒழுங்கு போலீசார் உட்பட 2000ம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக மொத்தம் 3050 பேர் பாதுகாப்பு பணியில் இருந்தாலும், இந்த பாதுகாப்பு போதாது. ஆயுதப்படை, டிஎஸ்பி, பட்டாலியன் போலீசார் இன்னும் 300 பேர் கூடுதலாக தேவை என மாவட்ட போலீஸ் நிர்வாகம் கேட்டுள்ளது. இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் டிஐஜி ஜோஸிநிர்மல்குமார், தேனி எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி பாஸ்கரன் மற்றும் டிஎஸ்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். ஓட்டு எண்ணிக்கை மையத்தையும் அவர் நேரடியாக பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

Related Stories: